சென்னை விமான நிலையத்துக்கு புதிய இயக்குநர்

 சென்னை: சென்னை விமான நிலையத்தின் இயக்குநராக சந்திரமவுலி கடந்த மூன்று ஆண்டுகளாக பணியில் இருந்தார். அவருக்கு தற்போது மும்பையை தலைமை இடமாக கொண்ட மேற்கு மண்டல விமான நிலையங்களுக்கான நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு புதிய இயக்குநராக ஸ்ரீகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையை தலைமை இடமாக கொண்டுள்ள தெற்குமண்டல விமான நிலையங்களின் இயக்குநராக ஏற்கனவே பணியில் இருந்தார். அவர் தற்போது சென்னை விமான நிலைய புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரியாக பணியாற்றிவரும் மாதவன் என்பவர் சென்னையை தலைமை இடமாக கொண்டுள்ள தென்மண்டல விமான நிலையங்களின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் வருகின்ற வாரத்தில் இந்த புதியபொறுப்புகளை ஏற்கின்றனர்.

Tags : Chennai Airport , Chennai, airport, new, director
× RELATED சென்னை ஐஐடி இயக்குனருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் என போலீசில் புகார்