×

இந்தி திணிப்பை திமுக எதிர்க்கும்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடியில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய கல்வி திட்டத்தில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இந்தியை கட்டாயமாக திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டிக்கிறோம். எந்த காலத்திலும் எந்த ஒரு மொழியையும் கட்டாயமாக திணிப்பதை திமுக எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குரல் எழுப்புவோம். திமுகவை பொறுத்தவரையில் ஒரு எம்பி இருந்தபோதுகூட நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.

தற்போதும் தமிழகத்துக்காகவும், நாட்டுக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் நிச்சயமாக குரல் கொடுப்போம். அதிமுகவின் உள்கட்சி பிரச்னை புதிதல்ல. அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிமுகவை பொறுத்தவரையில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக இணைந்து செயல்படுவது போன்று ஒரு வெளிதோற்றம் இருக்கிறதே தவிர, அவர்களுக்குள் என்னென்ன பிரச்னை இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,interview , Hindi Stuff, DMK, Opposite, Kanimozhi MB interview
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...