×

திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை துவக்கம்

திருவாரூர்: திருவாரூரில்  இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் தொடங்கின. நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகள் பொதுமக்களின் போராட்டத்துக்கு பிறகு ஒருவழியாக முடிக்கப்பட்டது. இந்த பாதையில் டெமு ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்பட்ட ரயிலை நாகை எம்.பி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மதியம் 2.15 மணியளவில் காரைக்குடியை ரயில் சென்றடைந்தது.

Tags : Tiruvarur ,train service starts ,Karaikudi , Tiruvarur - Karaikudi, train service, start
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...