×

டிக்-டாக் பயன்படுத்துவதை நிறுத்தாத இளம்பெண் கத்தியால் குத்தி கொலை: கல்லூரிக்குள் புகுந்து கணவன் வெறிச்செயல்

கோவை: கோவை புதூர் அருகே உள்ள குளத்துபாளையம் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(38). சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி நந்தினி(28). இவர் கோவை புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் நந்தினி வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் அங்கு வந்த கனகராஜுக்கும், நந்தினிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை கத்தியால் குத்தினார். காயமடைந்த நந்தினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தலைமறைவாக இருந்த கனகராஜை கைது செய்தனர். கனகராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

2 வருடமாக கருத்து வேறுபாட்டால் நந்தினியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். நந்தினி டிக்-டாக் செயலியில் அடிக்கடி தன்னுடைய வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தார். இதனை பார்த்த நான் அவரை கண்டித்தேன். இருப்பினும் அவர் டிக்-டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்வதை நிறுத்தவில்லை. மேலும் செல்போனில் யாருடனோ அடிக்கடி சிரித்து பேசி வருவதாக எனக்கு தெரியவந்தது. நேற்று மதியம் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, நீண்டநேரமாக இணைப்பு பிசியாக இருந்தது. ஏற்கனவே, அவரது நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கோபம் அதிகமானது. இது குறித்து அவரிடம் கேட்பதற்காக நான் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு சென்றேன். அப்போது அங்கு உள்ள வளாகத்தில் வைத்து எங்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.  இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் டிக்டாக் கம்பி எண்ணுகிறார் வாலிபர்:
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (20). இவர் மே 31ம் தேதி கண்டமனூர் காவல் நிலையத்திற்கு டிரைவிங் லைசென்ஸ் பேட்ஜ் சான்று பெறச்சென்றார். அவருடன் தங்கேஸ்வரன் வந்திருந்தார். அப்போது பரமேஸ்வரன் காவல் நிலையத்தின் முன்புறத்தோற்றத்தை தனது செல்போனில் படமாக எடுத்தார். அப்போது காவல் நிலையத்தில் பணியிலிருந்த பரமன் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை.நேற்று  காலை பணிக்கு வந்த பரமன், செல்போனில் டிக்டாக் பார்த்தபோது, கண்டமனூர் காவல் நிலையத்தில் நின்று பரமேஸ்வரன் டிக்டாக் செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பரமேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : teenager ,knife kills , Tick-tak, stupid, teenager, suicide killer
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை