சட்டசபை கூடுகிறது புதுச்சேரி புதிய சபாநாயகர் நாளை தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து அந்த பதவி காலியாக உள்ளது. இதையடுத்து, சட்டசபை நாளை காலை 9.30 மணிக்கு கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். இதில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். போட்டி வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லாததால் ஆளுங்கட்சி வேட்பாளர், சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்படும்.

Tags : Assembly ,Puducherry ,Speaker , Assembly, Puducherry, New Speaker, Tomorrow, Exam
× RELATED மராட்டியம், அரியானா சட்டமன்ற...