×

நரம்பு சுருள் நோய்க்கு நுண்துளை அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: நரம்பு சுருள் நோயை 30 நிமிடத்தில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு நரம்பு சுருள் நோய் 30 நிமிடங்களில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துமவனையின் நரம்பியல் பிரிவு மூத்த மருத்துவர் பாலாஜி கூறியதாவது: நரம்பு சுருள் நோய் உலக அளவில் 19 கோடி பேரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 2 வகையான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதில் ஒன்று ஸ்டிரிப்பிங் எனப்படும் ஒரு சிகிச்சை. இதில் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சையில் இருந்து நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வார காலம் ஆகும்.

மேலும், தோலில் சிராய்ப்பு, தழும்பு ஏற்படும். 2வது வகை லேசர் சிகிச்சை. ஆனால் லேசர் சிகிச்சைக்கு பல மயக்க ஊசிகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த இரண்டு நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை தவிர்க்க புதிய நுண்துளை சிகிச்சை முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளிக்கு அதிக பாதிப்பு இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒட்டுமொத்த நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த சிகிச்சையில் நோயாளிக்கு தழும்பு ஏற்படாது.

அமெரிக்காவில் மட்டுமே நரம்பு சுருள் நோய்க்கு நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அமெரிக்க மருத்துவர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் இந்த மருத்துவ சிகிச்சை முறையை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் அப்போலோ மருத்துவமனையில் முதல்முறையாக இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்தனர். இவ்வாறு டாக்டர் பாலாஜி கூறினார்.

Tags : Nerve curl disease, aperture, surgery, Apollo, record
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100