×

207 ரன்னில் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி

பிரிஸ்டல்: ஆஸ்திரேலிய அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்னில் ஆல் அவுட்டானது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. ஷாஷத், ஹஸ்ரதுல்லா இருவரும் டக் அவுட்டாகி வெளியேற, அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஹஸ்மதுல்லா 18, ரகமத் ஷா 43, முகமது நபி 7 ரன்னில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 77 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்நிலையில், கேப்டன் குல்பாதின் - நஜிபுல்லா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தது. குல்பாதின் 31 ரன், நஜிபுல்லா 51 ரன் எடுத்து ஸ்டாய்னிஸ் வீசிய 34வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தவ்லத் 4 ரன்னில் வெளியேறினார். ரஷித் கான் 27 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), முஜீபுர் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் 207 ரன்னுக்கு சுருண்டது. ஹமித் ஹசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸம்பா தலா 3 விக்கெட், ஸ்டாய்னிஸ் 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

Tags : Afghanistan ,team , 207 Runs, Curled, Afghanistan Team
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி