×

5 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டு விமான சேவை வருவாய் குறைந்துவிட்டது

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை வருவாய், கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஏப்ரலில் சரிவை சந்தித்துள்ளது இதற்கு பிரதான காரணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்திவிட்டதுதான் என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. உலகளவில், பல மாதங்களாக, இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை சந்தை பெரும் வளர்ச்சியை (20 சதவீதம் வரையில்) பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தில் (ஐஏடிஏ) சுமார் 290 விமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: வருவாய் - பயணிகள் - பயணம் கி.மீ.(ஆர்பிகே) இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை வளர்ச்சிப் பாதையில் இருந்தது. ஆனால், கடந்த 2014 ஜவரியில் இருந்து முதல் முறையாக இந்த ஏப்ரலில் சரிவை சந்தித்துள்ளது. ஆர்பிகே என்பது, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை வைத்து கணிக்கப்படுகிறது. “பலஆண்டுகளாக வளர்ச்சிப்பாதையில் சென்ற உள்நாட்டு விமான சேவை, கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 0.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்தியதுதான் இதற்கு முக்கிய காரணம்” என்று ஐஏடிஏ தெரிவித்துள்ளது. ஐ.ஏ.டி.ஏ.வில் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், தற்போது முடக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் ஆகிய இந்திய விமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நிதி நெருக்கடியால் தற்காலிகமாக கடந்த ஏப்ரலில் தனது விமான சேவையை முடக்கியது. ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டால், உள்நாட்டில் விமான பயண டிக்கெட் அதிகரித்துவிட்டது. இதுவே உள்நாட்டு விமான சேவை வருவாய் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


Tags : 5 year, first time, domestic service, revenue, decrease
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...