இ-சிகரெட் தடை? அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: மத்திய அரசின் ஆராய்ச்சி பிரிவான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அரசுக்கு செய்துள்ள பரிந்துரையில், பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இ-சிகரெட் மற்றும் எலெக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம்ஸ் (என்ட்ஸ்) ஆகியவற்றை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. பொதுவாக, சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக, இ-சிகரெட்டை பயன்படுத்த துவங்குகின்றனர். சிகரெட்டில் நிகோடின் புகை வருவதால் அது உடல்நலனுக்கு கேடுவிளைக்கும் என்பதால் இ-சிகரெட்டை பயன்படுத்துகினறனர். ஆனால், இ-சிகரெட்டில் திரவ வடிவில் உள்ள நிகோடின் ஆவியாகி உடலுக்குள் செல்கிறது.

எனவே இதை தொடர்ந்து இதை பயன்படுத்தினால் சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் அதே அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு உள்ளது. ஐசிஎம்ஆர், அரசுக்கு அளித்த வெள்ளை அறிக்கையில், அறிவியல் பூர்வமாக திரட்டப்பட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ‘என்ட்ஸ்’ பயன்படுத்துவதால், நிகோடின் அதிக அளவில் உடலுக்குள் செல்கிறது. இது உடல் நலத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மரபணு கேளாறுகள், புற்றுநோய், ரத்தம் செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படலாம். அதேபோல், நரம்பு சம்மந்தமான நோய்களும் தாக்க வாய்ப்பு, சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘என்ட்ஸ்’ கருவிகள், திரவ வடிவில் உள்ள நிகோடினை தனது வெப்பதால் ஆவியாக்குகிறது. மேலும் அவரவர்கள் விரும்பும் கிளிசரின் உள்பட வாசனை திரவத்தையும் சேர்க்கின்றனர். இதனால், புகையால் ஏற்படும் பாதிப்பைவிட அதிக அளவு பாதிப்பு நேரடியாக உடலுக்கு ஏற்படுகிறது. என்ட்ஸ் போன்ற இ-சிகரெட்கள், ஹீட்-நாட்-பார்ன்-டிவைஸ், வாபே, இ-ஷீஷா, இ-நிகோடின் வாசனை உள்ள குட்கா ஆகியவையும் பயன்படுத்துகின்றனர்.இவற்றில் பொதுவானது இ-சிகரெட்.. இவற்றில் பயன்படுத்தப்படும் திரவ வடிவ நிகோடின், ஆவியாகி உடலுக்கு நேரடியாக செல்வதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் இதுபோன்ற லாகிரி வஸ்துகளை தடை செய்ய வேண்டியது அவசியத்திலும் அவசியம் என்பதை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags : Government , E-cigarette, banned? Recommendation, Government
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...