×

கொளுத்தும் வெயிலில் சுற்றியதால் பாம்புக்கு தண்ணீர் கொடுத்த மக்கள்: சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ

திருமலை: ஆந்திராவில் நாகப்பாம்புக்கு பொதுமக்கள் தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், நீர்நிலைகள் தண்ணீரின்றி வற்றி காணப்படுகிறது. வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்காவில் உள்ள ஒரு காலனியில் நாகப்பாம்பு ஒன்று சுற்றியது.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த பாம்பை அங்கிருந்து விரட்டியடிக்காமல் அதற்கு பாட்டில் மூலம் தண்ணீர் வழங்கினர். தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்ட நாகப்பாம்பை, பாம்பு பிடிப்பவர் வந்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதற்கிடையே பாம்புக்கு பொதுமக்கள் தண்ணீர் கொடுத்ததும் அதை பாம்பு குடித்ததையும் பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Water, snake, people, social network, video
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...