சென்னையில் தொடங்கியது மாநில நீச்சல் போட்டி

சென்னை: மாநில அளவிலான 36வது சப் ஜூனியர், 46வது ஜூனியர் நீச்சல்  போட்டிகள்  சென்னையில் நேற்று தொடங்கியது. இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நீச்சல் கிளப்களை சேர்ந்த  650 நீச்சல் வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.  

சிறுமியருக்கான 200மீ ப்ரீஸ்டைல் போட்டியில் கரோலின் கேன்டி (டர்டல்ஸ் கிளப்) முதலிடமும், அத்விகா (ஜென்னிஸ்) 2வது இடமும், ரோஷினி(எஸ்டிஏடி) 3வது இடமும் பிடித்தனர். சிறுவர்களுக்கான 200மீ ஃபிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஸ்ரேயாஸ்(எஸ்டிஏடி-டால்பின்) முதலிடமும், சபரீஷ்(டர்டல்ஸ்) 2வது இடமும், அம்ரீஷ்(ஏஎன்எஸ்-துபாய்) 3வது இடமும் பிடித்தனர்.போட்டிகள் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறும்.

× RELATED சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது