×

ஹீரோ சப்-ஜூனியர் கால்பந்து: சென்னை சிறுவன் அசத்தல்

சென்னை: அகில இந்திய ஹீரோ  சப்-ஜூனியர் கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய சென்னை சிறுவனால் மும்பையின் ஆர்எப்ஓசி அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவாவில்  அகில இந்திய ஹீரோ சப் ஜூனியர் கால்பந்து லீக் போட்டி நடைப்பெற்றது.  இறுதிப்போட்டியில்  மும்பை சிட்டி எப்சி அணியான ரிலையன்ஸ் பவுண்டேஷன் யங் சாம்ப்ஸ்(ஆர்எப்ஓய்சி) அணியும், பெங்களூர் கால்பந்து கிளப் அணியும் மோதின. அதில் ஆர்எப்ஓய்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் திருமலை. இவர் தனது  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆர்எப்ஓய்சி அணி வெற்றி பெற்றதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியயை சேர்ந்த கார்த்திக் வயது 12. கடந்த 3 ஆண்டுகளாக மும்பை சிட்டி எப்சி அணிகளுக்காக விளையாடி வருகிறார். ஸ்பெயினில் நடைப்பெற்ற கிளப்களுக்கு இடையிலான சப்-ஜூனியர் கால்பந்து போட்டியிலும் விளையாடி உள்ளார்.   மும்பையில் தொடர்ந்து கால்பந்து பயிற்சியை தொடரவேண்டி உள்ளதால் படிப்பையும் அங்கேயே தொடர்கிறார். கார்த்திக்கின் குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அப்பா திருமலை ஆட்டோ டிரைவர். சென்னை குடிசைவாழ் சிறுவர், சிறுமியர்களை கால்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ‘ஸ்லம் சில்ட்ரன் ஸ்டெட்’ அமைப்புதான் கார்த்திக்கிற்கு முதலில் பயிற்சி அளித்தது.

Tags : Hero Sub-junior ,Chennai , Hero Sub-junior football,Chennai boy
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...