×

யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விளக்கம்

டெல்லி: யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார். மும்மொழிக்கொள்கை என்பது வரைவில் தான் உள்ளது; அரசின் கொள்கை முடிவு அல்ல என்று ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கருத்தை அறிந்த பின்பே கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார். மும்மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கை வரைவு வெளியானது. தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.

Tags : anyone ,Department of HRD , Human Development Department, Hindi
× RELATED கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.: தமிழக பாஜக தலைவர்