பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவுடனான உறவுகள் நேர்மறையான பாதையில் தொடரும்: அமெரிக்கா நம்பிக்கை

அமெரிக்கா: பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவுடனான உறவுகள் நேர்மறையான பாதையில் தொடரும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர், துணை அதிபர், மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் அறிக்கை, ட்விட்டர் பதிவு மற்றும் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர். இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஆர்வத்தை இது காட்டுவதாகவும், இரு நாட்டு கூட்டுறவு மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோடி-டிரம்ப் இருவருக்கும் இடையே அரசு முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நல்லுறவும் ஈர்ப்பும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த அதிகாரி, அடுத்த மாதத்தில் ஜப்பானின் ஒசாகாவில் இரு தலைவர்களும் ஜி-20 உச்சி மாநாட்டின்போது சந்தித்துப் பேச இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மோடி-டிரம்ப்-ஷின்சோ அபே ஆகிய மூன்று தலைவர்களும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

× RELATED இங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை...