×

ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு 3,150 டன் யூரியா மூட்டை வந்தது

தஞ்சை : ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து தஞ்சைக்கு 3,150 டன் யூரியா மூட்டைகள் வந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் ஆங்காங்கு குறுவை சாகுபடி செய்துள்ளனர். இதற்கு அடியுரம், மேலுரத்துக்கு யூரியா தேவை. இதையடுத்து தற்போது பல பகுதிகளிலிருந்து யூரியா வாங்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு 58 ரயில் வேகன்களில் யூரியா உர மூட்டைகள் வந்தது.

இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கிருந்து தேவைப்படும் விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகிக்கப்படவுள்ளது.


Tags : Tanjore ,Andhra Pradesh , agriculture,Tanjore ,andra ,Urea bundle
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...