×

இந்தி மொழியை திணித்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கும்: இரா.முத்தரசன் எச்சரிக்கை

தஞ்சாவூர்: இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தி மொழியை திணித்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 4ம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம் நடைபெறும் என்றும், டெல்டா மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : anti-Hindi ,R ,protest , Hindi language, pushing and anti-Hindi struggle, R.Muthurasan
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!