நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு

புதுடெல்லி: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்றத்தின் மைய அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராக சோனியா காந்தியை எம்பிக்கள் தேர்வு செய்துள்ளனர். நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார்.


Tags : Sonia Gandhi ,Congress , Parliament leader, Congress, President, Sonia Gandhi
× RELATED நாட்டில் வெறுப்புணர்வை பரப்பி மக்களை...