×

தமிழ்நாடு மின்வாரிய தேர்விலும் வெளிமாநிலத்தவர்களுக்கு இடம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்:

உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட300 பேரில் 36 பேர் வெளிமாநிலத்திலிருந்து நியமித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மொத்த பணியிடங்களில் 12% பேரை வெளிமாநிலங்களில் இருந்து தேர்வு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசுப்பணிகள் மற்றும் மத்தியஅரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க  சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்விரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்:

உதவி மின்பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்வாகியிருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழக வாழ்விரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக அரசு பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்றும், தமிழகத்தில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு நிறுவன பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே என்றும் சட்டம் இயற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய தலைவர் பெ.மணியரசன் கண்டனம்:

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளிமாநிலத்தவருக்கு 95 விழுக்காடு வேலைத் தருவதால் தமிழர்கள் தாயகத்திலேயே அகதியாகி வருவதாக தமிழ் தேசிய தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவி பொறியாளர்களுக்கான பணி அமர்தல் பட்டியலில் வெளிமாநிலத்தவரை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : Venkurugan Party ,leaders ,Tamilnadu Electoral Electorate , Vaiko, condemned, Tamil Nadu Electricity, Outdoor
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...