×

தமிழகத்தில் பாஜக தோற்றது மோடி எதிரான அலையினால் அல்ல :துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தி விளக்கம்

சென்னை : தமிழகத்தில் பாஜக தோற்றது மோடிக்கு எதிரான அலை வீசுவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் உண்மையில்லை என்று தணிக்கையாளரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றுள்ளார். நாடு தழுவிய அளவில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், ட்விட்டரில்  பதிவிட்டுள்ள துக்ளக் ஆசிரியரும், தணிக்கையாளருமான குருமூர்த்தி, அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல, 5 தொகுதிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும், 5 தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பாஜக, 2 தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரு தொகுதியில் 3 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரே தொகுதியில் மட்டுமே 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை பதிவுசெய்துள்ளதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு எதிரான அலை வீசியிருந்தால், அனைத்து தொகுதிகளிலும் 4 முதல் 5 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்திருக்க வேண்டும் . அப்படியென்றால், யாருக்கு எதிரான அலை வீசுகிறது என்று அதிமுக-வை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.மோடிக்கு எதிரான அலை வீசுவதாக உண்மைக்கு மாறாக சிலர் பிரசாரம் செய்துவருவதன் காரணமாகவே, தான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : defeat ,BJP ,Gurumurthy ,Tamil Nadu ,Modi , Modi, Tughlaq, teacher, clergy, explanation, BJP
× RELATED பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது;...