×

அமெரிக்காவின் விர்ஜினியா பீச் பகுதியில் துப்பாக்கிச்சூடு : 12 பேர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா பீச் பகுதியில் அமைந்துள்ள கட்டிட வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் கூறியதாவது; அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்திருப்பதால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா  பீச் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிட வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை அருகில் உள்ள விர்ஜினியா பீச் கிரேஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Area ,Virginia Beach , 12 dead, 6 hospitalized ,Virginia Beach shooting
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...