×

சிட்லப்பாக்கம், காசிமேடு பகுதிகளில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

தாம்பரம்: குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சி 11வது மற்றும் 12வது வார்டுகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகம் எதிரே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைத்து சென்றனர்.

பெரம்பூர்:  காசிமேடு பவர் குப்பம்  பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு  கடந்த சில வருடங்களாக பொது குழாய்களில் குடிநீர் சரியாக வருவது இல்லை. இதனால், இந்த பகுதி மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர்  வழங்கப்படுகிறது. கோடை வெயிலால் அதுவும்  கடந்த சில நாட்களாக வழங்கவில்லை.இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சூரிய நாராயணா சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.   இதையடுத்து லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.


Tags : areas ,Citadel ,Kasimadu , drinking water , Citlapakka, Kasimadu
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!