×

கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே புறநகர் விரைவு ரயில் சேவை இன்று மீண்டும் தொடக்கம்

சென்னை: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே மீண்டும் புறநகர் விரைவு ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது, என்று சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் கூறினார். புறநகர் விரைவு ரயில் இயக்கப்படுவது தொடர்பாக நேற்று சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், சென்னை கோட்ட மேலாளர் மகேஷ், உதவி கோட்ட மேலாளர்கள் முகுந்த், இளங்கோவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஓம்.பிரகாஷ் நாராயணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 85 சதவீதம்  ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக  சில நேரங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. புறநகர் விரைவு ரயில் 11ல் இருந்து 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புறநகர் விரைவு ரயில்கள் கடற்கரை முதல் செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லும்.

சில ரயில்கள் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் சில பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அது சரி ெசய்யப்பட்டதால் இன்று முதல் 7 ரயில்கள் இயக்கப்படுகிறது. பறக்கும் ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேஜஸ் புதிய விரைவு ரயில், மதுரை செல்லும் பயணிகளிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் என 2 ரயில்கள் இயக்கப்படுகிறது. கொல்லம் வழித்தடம் சீராக்கப்பட்டதால்   புறநகர் விரைவு ரயில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ரயில்களை அதிகம் பேர் பயன்படுத்துவதால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் இனி புதிதாக வரும் அனைத்து ரயில்களிலும் 12 பெட்டிகளாக இயக்கப்படும். ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி தானியங்கி கதவுகள் பொருத்துவதில் சற்று சிரமங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தியதை அடுத்து மீண்டும் விரைவு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக யுடிஎஸ் ஆப் பயன்படுத்தலாம். மும்பையில் அதிகம் பேர் யுடிஎஸ் ஆப் தான் பயன்படுத்துகின்றனர். எனவே பிரிண்டிங் டிக்கெட் தேவையில்லை. மொபைலில் யுடிஎஸ் ஆப் பதிவிறக்கம் செய்து அதில் உள்ள டிக்கெட்டை காண்பித்தால் போதுமானது.  
இவ்வாறு அவர் கூறினார்.

சிசிடிவி கேமரா


ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எழும்பூர்  ரயில் நிலையத்தில் அதிகப்படியான பயணிகள் வந்து செல்வதால் வசதிகளை  மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அங்கு புறநகர்  ரயில்கள் மற்றும் பிளாட்பார டிக்கெட் எடுக்க ஒரே கவுன்டர் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.

Tags : Seaport ,Tambaram ,Chengalpattu , Beach, Tambaram and Chengalpattu, suburban fast train service ,resume today
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!