மறுபடியும் முதல்ல இருந்தா... தமிழகத்தில் பாஜ பலம் பெறும்: கூறுகிறார் தமிழிசை

சென்னை: தமிழகத்தில் பாஜ பலம்பெறும் என தமிழிசை கூறியுள்ளார்.  தமிழக பாஜ தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். தமிழகத்திலும் பாஜ பலம் பெற இருக்கிறது. இங்கு பலம்  பெற பெற, மத்திய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். தற்போதைய அரசு, மக்களுக்கு துன்பம் தரக்கூடிய பிரச்னைகளை முன்னெடுக்கப்போவதில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் மிகுந்த அக்கறையோடு பல நல்ல  திட்டங்களை கொண்டு வருவதற்கான பணிகள் நடக்கும்.

பாஜ கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்பியான ரவீந்திரநாத், மத்திய அமைச்சரவையில் இடம்பெற தமிழக பாஜ பரிந்துரை செய்வது பற்றி, கட்சி தலைமையும் பிரதமர் மோடியும்தான்  முடிவெடுக்க வேண்டும். தற்போது அதுபற்றி கருத்து கூற விரும்பவில்ைல.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : state ,Tamilnadu , Tamilnadu, Bjp, Tamilnadu
× RELATED ஜார்கண்டில் பலம் பெற்ற தாமரை:...