ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமர் லோடெய் ஷெரிங் கலந்து கொண்டார். அப்போது, ஒரு தனியார் டிவி சேனல் ஒன்று அவருக்கு பதிலாக அந்நாட்டு உள்துறை தலைமை ஆலோசகர் ஷெரிங் வாங்சுக் படத்தையும், மற்றொரு சேனல் முன்னாள் பிரதமர் ஷெரிங் தோப்கயின் படத்தையும் தவறுதலாக ஒளிபரப்பின.