×

கடல் எல்லையில் நுழைந்து மீன் பிடித்த விசைப்படகை துரத்தி பிடித்த கடலோர பாதுகாப்பு படை : சினிமாவை மிஞ்சும் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள கடல் எல்லையில் நுழைந்த விசைப்படகை கடலோர பாதுகாப்பு படையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இலங்கையில்  இருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு படகில் லட்சத்தீவை  நோக்கி வரலாம் என மத்திய உளவுத்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கேரள எல்லையில் கண்காணிப்பை  பலப்படுத்த மத்திய உள்துறை உத்தரவிட்டது. அதன்படி, கடந்த சில  தினங்களாக கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடல் அமலாக்கத்துறை  படையினர், கேரள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கொல்லம் அருகே ஆழ்கடலில்  விசைப்படகு ஒன்று மீன்பிடித்து கொண்டிருந்தது. விழிஞ்ஞம் கடல் அமலாக்கத்துறை படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.   ஆனாலும் படகு அங்கிருந்து செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  அமலாக்கத்துறை அதிகாரிகள் படகை சோதனை செய்ய விரைந்தனர். அதிகாரிகள் வருவதை  கண்டதும் அந்த விசைப்படகு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்று விட்டது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கடல் அமலாக்கத்துறையினர் அந்த விசைப்படகை துரத்தி  சென்றனர்.

விழிஞ்ஞம் கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல்  தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அதிவிரைவு படகில் வந்து  விசைப்படகை விரட்டி சென்றனர்.  
பலமுறை  எச்சரிக்கை விடுத்தும் விசைப்படகு நிற்காமல் ேவகமாக விரைந்து சென்று  கொண்டிருந்தது. இதனால் கடலோர பாதுகாப்பு படையினர் கொச்சி தலைமையகத்துக்கு  தகவல் தெரிவித்தனர். அங்கு, கொச்சி கடலோர பாதுகாப்பு படையினர்  உஷார்படுத்தப்பட்டனர். அங்கிருந்து கப்பல்கள் புறப்பட தயாராயின.  இதற்கிடையே ஆழ்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த  விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த  நிலையில் கடலோர பாதுகாப்பு படையினர் அந்த விசைப்படகை துரத்தி சென்று  கொண்டிருந்தனர். மேலும் விசைப்படகை நிறுத்தாவிடில் துப்பாக்கியால்  சுடப்போவதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் விசைப்படகு நிற்பதாக  இல்லை. இதற்கிடையே கொல்லம் மரியநாடு பகுதியில் விசைப்படகை அதிகாரிகள்  சுற்றி வளைத்தனர். பின்னர் விசைப்படகில் ஏறி சோதனை செய்தனர்.

விசைப்படகில்  மொத்தம் 14 பேர் இருந்தனர். 8 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 6 பேர் வட  இந்தியாவை சேர்ந்தவர்கள். 20 பெட்டிகளில் மீன்கள் இருந்தன. அவர்களிடம்  மீன்பிடி லைசென்சும் இருந்தது. பின்னர் அதிகாரிகள் விசைப்படகு மற்றும்  அதில் இருந்தவர்களை விழிஞ்ஞத்துக்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 14  ேபரிடமும் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். இந்த துரத்தல் சம்பவம் கேரள கடல் பகுதியில் பெரும் பதற்றத்தையும்,  பரபரப்பையம் ஏற்படுத்தியது.

Tags : security force ,sea shore , Coast Guard, Security Force:
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...