×

பொய்கை அணை அடிவாரத்தில் விவசாயியை தாக்கியது கரடியுடன் போராடி எஜமானை காப்பாற்றிய வேட்டை நாய்கள்

ஆரல்வாய்மொழி: பொய்கை  அணை அடிவார பகுதியில் உள்ள தோப்பில் புகுந்த கரடி, விவசாயியை விரட்டி  விரட்டி தாக்கியது. இதை பார்த்து அவரது நாய்கள், கரடியுடன்  போராடி அவரை காப்பாற்றின. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்த  செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (60).  விவசாயியான இவருக்கு பொய்கை அணை அடிவாரத்தில் தோப்பு உள்ளது. இங்கு மா, முந்திரி உள்ளிட்டவை  பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை தோப்புக்கு சென்ற இவர் வழக்கம்போல் தன்னுடைய 3 வேட்டை நாய்களையும் உடன் அழைத்து சென்றார். தோப்பில்  நின்று கொண்டு இருந்தபோது  திடீரென அந்த பகுதியில் வந்த கரடி  தேவசகாயத்தை தாக்கியது. இதனால் அவர்  கூச்சலிட்டார்.

இதை பார்த்த அவரது நாய்கள் பாய்ந்து வந்து கரடியை தாக்க தொடங்கின. கரடியுடன், 3 நாய்களும் மாறி, மாறி  சண்டையிட்டன. ஆனாலும் கரடி விடாமல் தேவசகாயத்தை துரத்தி, துரத்தி  கடிக்க பாயந்தது. நாய்கள், கரடியை தேவசகாயத்தின்  அருகில் நெருங்க விடாமல்  விரட்டின. ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாத கரடி அங்கிருந்து தப்பி ஓடியது. தேவசகாயம் கரடி தாக்கிய விஷயத்தை போன் மூலம் தனது குடும்பத்தினருக்கு  தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர், ஊர்  பொதுமக்கள் அங்கு  விரைந்தனர்.
படுகாயம் அடைந்த தேவசகாயத்தை மீட்டு,  ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கரடியிடம் நாய்கள் போராடி தேவசகாயத்தை மீட்ட சம்பவத்தை உறவினர்கள், வனத்துறையினர் பாராட்டினர்

Tags : Hunting dogs ,base ,lake fire , Poi Dam Dam, Farmer, Bear, Hunting Dogs
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...