×

செஞ்சியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த நரசிம்மர் சிலை கண்டெடுப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. கி.பி.1714ம் ஆண்டு ராஜாதேசிங்கிற்கும், ஆற்காடு நவாப்புக்கும் இடையே நடந்த போரால் கோயில்  சேதமானது. அதன்பிறகு வழிபாடு நடக்கவில்லை.  எனினும், கடந்த 20 ஆண்டுகளாக சிறிய கோதண்டராமரை கருவறையில் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தூண்கள் அமைக்க மண் நிரப்பியபோது,  பொக்லைன் இயந்திரத்தில் மண்ணுடன் கலந்து 2 அடி உயரத்தில் நரசிம்மர் சிலை கிடைத்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், கோயிலுக்கு வந்து நரசிம்மர் சிலையை வழிபட்டு செல்கின்றனர்.


Tags : Narasimha ,Chenganni , Ganga, Narasimha statue
× RELATED சோளிங்கர் நரசிம்மர் கோவிலில்...