×

126 சிறிய லாரிகள் மூலம் குறுகிய சாலையில் குடிநீர் வினியோகம் செய்ய திட்டம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி

சென்னை: 126 சிறிய லாரிகள் மூலம் குறுகிய சாலையில் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். குடிநீர் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். தண்ணீர் விநியோகம், இருப்பு, பற்றாக்குறை,  உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் முற்றிலுமாக இறங்கிவிட்டது என தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் 560 கனஅடி நீர், ஜூன் 15-ம் தேதி வரை வினியோகம் செய்ய முடியும் என்றும் அதன் பிறகும் மழை பெய்யாவிட்டாலும் 500 கனஅடி நீர் அக்டோபர் வரை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், 126 சிறிய லாரிகள் மூலம் குறுகிய சாலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தள்ளார். நாள்தோறும் 9 ஆயிரம் நடை குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு விலை நிர்ணயிக்க விரைவில் குழு அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். அதேபோல, போர்க்கால அடிப்படையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : SV Velumani ,interview ,road , Lorries, Drinking Water Supply, Minister SV Velumani,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி