×

வேலிவியூ பள்ளத்தாக்கு பகுதியில் செல்பி எடுக்க தடை

ஊட்டி : ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பள்ளதாக்கு பகுதியில் சரிவான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் விழுந்து விடுவதை தவிர்க்கும் வகையில் செல்பி எடுக்க தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் இயற்கை, பள்ளதாக்குகள் சுற்றுலா பயணிகளை கவருகின்றன. குறிப்பாக அவலாஞ்சி, முதுமலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனம் சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதற்கு முக்கிய சாலையாக மேட்டுபாளையம்-ஊட்டி சாலை விளங்கி வருகிறது. வனப்பகுதி வழியாக வரும் இச்சாலையில் பல இடங்களில் அழகிய பள்ளதாக்குகள் காணப்படுகின்றன.

ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இயற்கை காட்சிகள் மற்றும் பள்ளதாக்குகளை பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் எல்லை மீறும் சில சுற்றுலா பயணிகள் சாலையோர தடுப்புகளை தாண்டி சென்று வனப்பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அவ்வப்போது தவறி சரிவான பகுதிகளில் விழுந்து காயமடையும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பள்ளத்தாக்கு பகுதி உள்ளிட்ட அபாயகரமான சரிவான பகுதிகளில் ஆபத்தான பகுதியில் செல்பி எடுக்க தடை என்பதை குறிக்கும் வகையில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 


Tags : valley valley area , ooty,Selfies ,banned,ValleyView
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு