×

கம்பம் பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஏமாற்றும் மழையால் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

* முதல் போகம் நடக்குமா?


சின்னமனூர் :   கம்பம் பள்ளத்தாக்கில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் கண்மாய்கள், குளங்கள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் முதல் போகம் நெல் சாகுபடி நடக்குமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் ஒவ்வொரு ஆண்டும் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. இதற்கு முல்லை பெரியாறு அணையின் பாசனநீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் மழை வளம் குறைந்திருப்பதால், உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. விளைநிலங்களும் வானம் பார்த்த பூமியாக மாறி வருகிறது. இதனால் பாசனநீர் பெறுவதற்கு வான் மழையை விவசாயிகள் நம்பும் நிலை உள்ளது.

alignment=


தமிழக, கேரளா எல்கைகளில் கனமழை பெய்தால்,முல்லைப் பெரியாறு அணை 120 அடியைத் தாண்டி விட்டால், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக நெல்சாகுபடிக்கு ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்படும். 240 நாட்களுக்கு இரு போக நெல் சாகுபடிக்கு  தண்ணீர் கொடுத்தால் 14 ஆயித்து 714 ஏக்கர் பயன் பெறும். தற்போது கோடை காலத்திற்கான மழை சரியாக பெய்யாததால் அணையும் வறண்டு அதனைச் சார்ந்த கண்மாய், குளங்களும் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் கிணறுகளும், ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு வருகின்றன. இதனால் விவசாய பயிர்களை விளைவித்து எடுக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

சின்னமனூர் பகுதியிலுள்ள இருபோகம் நெல் விளைச்சலின் போது பாசன பற்றாகுறையினை சமாளிக்கும் கருங்கட்டான் குளம், உடையகுளம், செங்குளம் உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள அனைத்து நீர்பிடிப்பு குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு இரண்டாம் போகம் நிறைவடைந்தவுடன் ஜூன் மாதம் துவங்கும் முதல்போகத்திற்கு இடையே உள்ள காலகட்டத்தில் கானம், துவரை, உளுந்து மற்றும் உரத்திற்கு தேவைப்படும் கொழுச்சி பயிரிடப்படவில்லை. தற்போது அதே நிலை நீடிக்கிறது.

கோடைமழை பெய்வதற்கு பதில் சூறைக்காற்று வீசி மரங்களையும், வீடுகளையும்  சேதப்படுத்தி சென்றுள்ளது. எனவே, மழை வந்தால் முதல் போக விவசாயத்தை துவக்கி விடலாம் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


Tags : Valley of Pole , Drought ,Theni ,Ponds , chinnamanur,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி