தேர்தல் நேரத்தில் பேசியே ஏமாற்றுவது மோடிக்கு கைவந்த கலை காங்கிரசை வலுப்படுத்த ராகுல் பதவியில் நீடிக்க வேண்டும்: தமிழக இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: காங்கிரசை வலுப்படுத்த ராகுல்காந்தி தொடர்ந்து தனது பதவியில் நீடிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜ பார்க்காத அசிங்கமா, பாஜ சந்திக்காத அவமானமா?. அதையும் தாண்டி அவர்கள் கட்சியை நடத்தினார்கள். நாம் இப்போது சந்தித்திருப்பது வெறும் ஏமாற்றம் மட்டுமே. சுதந்திரம் பெற்றது முதல் வாஜ்பாய் ஆட்சியை பிடிக்கும் வரை அரசாங்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் பாஜகவினர் இருந்தனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் பொய்யும், புரட்டும் வேகமாக பரவும் நேரம். இதை பாஜ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விட்டது. வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த நாடு இன்று மோடியின் சூழ்ச்சியை நம்பி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணமதிப்பு நீக்கம் என்ற பெயரில் பொருளாதார சீரழிவு, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தினார். தேர்தல் நேரத்தில் பேசியே மக்களை ஏமாற்றுவது மோடிக்கு கைவந்த கலை. எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருந்தும், அதற்கு பதில் சொல்லாமல் 5 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்லாமல் மக்களை போலி வாக்குறுதிகளை கூறி மீண்டும் ஏமாற்றிவிட்டார்.

இப்பேற்பட்ட சூழ்நிலையில், நாடு முழுவதும் விவசாயிகள், கிராமப்புற மக்களின் நம்பிக்கையை பெற்றவராக வலம் வருபவர் ராகுல்காந்தி. அதிக உண்மையும், நேர்மையாக இருப்பதுதான் அவருடைய பலம். அதை மோடி போன்றவர்கள் செய்ய முடியாது. ராகுல்காந்தி அன்பை விதைத்தார். மோடி நஞ்சை விதைத்துள்ளார். கோடிக்ககணக்கான இந்திய மக்களின் மனதை வென்றுள்ள ராகுல்காந்தி பெற்றது தான் உண்மையான வெற்றி. அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, காங்கிரசை வலுப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி தொடர்ந்து நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Rahul ,office ,Congress ,Modi , Election Time, Talking to Speech, Modi, Art of Action, Rahul
× RELATED ஜே.என்.யு. பல்கலை கழகத்தில்...