×

வணிகவரித்துறையில் 2036 பணியிடங்கள் குறைக்க எதிர்ப்பு கமிஷனர் உடன் வணிகவரித்துறை சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை: 1400 பேரை வேறு துறைக்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தல்

சென்னை: தமிழக வணிகவரித்துறையில் 2036 பணியிடங்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு வணிகவரித்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வணிகவரித்துறை சங்க கூட்டமைப்பினர் கமிஷனரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக வணிகவரித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று எழிலக வளாகத்தில் வணிகவரித்துறை ஆணையர் சோமநாதனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் 3 மணி நேரம் வரை இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

அப்போது, வணிகவரித்துறையில் பணியிடங்களை குறைக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகவரித்துறையில் பணிபுரியும் 1,400 பேரை வேறு துறைக்கு மாற்றும் முடிவையும் கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, வணிகவரித்துறை ஆணையர் 1,400 பேர் மாற்றப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்ததாக தெரிகிறது. இது குறித்து வணிகவரித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பினர் கூறும் போது, ‘வணிகவரித்துறையில் 10,300 பணியிடங்கள் உள்ளது. இதில், 900 பணியிடங்கள் காலியாக உள்ளது.

1,500 வணிகர்களுக்கு ஒரு வரி விதிப்பு வட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போது 7.50 லட்சம் வணிகர்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால் 500 வரி விதிப்பு வட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன்படி பார்த்தால் 12,500 பணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள 2,360 பணி இடத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது தவறு.  ஜிஎஸ்டி வரியை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் 2036 பணியிடங்கள் குறைப்பது தவறு. எனவே, அதை வைத்து கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.


Tags : Commissioner of Trade Unions Confederation ,talks ,opposition commissioner , Commercial Tax Department, 2036 Workplaces, Complaints to Reduce Opportunity Commissioner
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...