×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடால்,பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர், ரபேல் நாடல் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடைப்பெற்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நாடல் 6-1, 6-2, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் யானிக் மேடனை வீழ்த்திய 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 2 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைப்பெற்றது. சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-3, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் ஆஸ்கர் ஒட்டேவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன் டேவிசை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் அலியனா போல்சோவா 7-6, 7-6 ன்ற நேர் செட்களில் போராடி வென்றார். உலககின் முதல்நிலைய வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா 4-6, 7-5, 6-3 என்ற செட்களில் 43வது இடத்தில் இருக்கும் பெலரசின் விக்டோரியா அசரென்காவை போராடி வென்றார். இந்தப் போட்டி 2 மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது.

Tags : Federer ,French Open Tennis Nadal ,round , French Open Tennis, Nadal, Federer, 3rd round, progress
× RELATED பொன்னேரி பேரூராட்சி பகுதிகளில்...