×

கலெக்டர் அலுவலகம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவலர் ஓய்வு இல்லம்: கமிஷனர் திறந்து வைத்தார்

பெரம்பூர்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஜாபர் சாதிக் தெருவில் காவலர்களுக்கான ஓய்வு இல்லம் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதனை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை திறந்துவைத்து பேசியதாவது: வெளி மாவட்டங்களில் இருந்து பணி காரணமாக சென்னைக்கு வரும் காவலர்கள், அதிகாரிகள் தங்குவதற்காக கடந்த 2005ம் ஆண்டு ஓய்வு இல்லம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை நவீனமயமாக்கும் பணி ₹50 லட்சத்தில் நடைபெற்றது. இங்கு போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் என 30 பேர் தங்கும் வகையில் தனித்தனியாக 12 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்குவதற்கு காவலர்களுக்கு 50 ரூபாயும், போலீஸ் அதிகாரிகளுக்கு 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள காவலர்களுக்கான ஓய்வு இல்லமும் விரைவில் நவீனமயமாக்கப்படும். கோட்டூர்புரத்தில் போலீசாரை பார்த்ததும் மர்ம நபர் சாலையில் வீசி சென்ற 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் என்பவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் பேசினார். விழாவில் வடக்கு மாவட்ட கூடுதல் கமிஷனர் தினகரன், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் கலைச்செல்வன், மாதவரம் துணை கமிஷனர் ரவாலி பிரியா, எண்ணூர் உதவி ஆணையர் உக்கரபாண்டியன், பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Collector ,Guard Retirement Home ,Office: Commissioner , Collector's Office, Police Rest, Home, Commissioner Opened
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...