ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, ஆழப்படுத்தி தூர்வாரி சீரமைக்க வேண்டும். திருச்சி-சிதம்பரம் சாலை 145 கிலோ மீட்டர் தூரம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையை அகலப்படுத்த தேவையான மண் கிராவல்களை பொன்னேரியில் இருந்து எடுக்க வேண்டும். இதனால் பொன்னேரி ஆழம் பெறும் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டுமென ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் கொடும்பாவி எரித்தும், சட்டி பானையை தலையில் வைத்து கொடும்பாவியை சுற்றி வந்து உடைத்து நூதன ஆர்ப்பாட்டமும் செய்தனர்.