×

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு வாடிக்கையாளர் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெறலாம்

மும்பை: வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சரிபார்ப்பதற்கு அவர்களின் ஒப்புதலுடன்தான் ஆதார் விவரத்தை கேட்டுப் பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது உள்பட பல்வேறு வங்கி சேவைகளின்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்கின்றன. வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கும்போதும், புதிய கைபேசி இணைப்பு பெறும்போதும் வாடிக்கையாளர் தாமாக முன்வந்து 12 இலக்க ஆதார் எண் விவரத்தை கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சட்டத் திருத்த்திற்கு கடந்த பிப்ரவரியில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 16வது மக்களவையின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மசோதா காலாவதியாகிவிட்டது. இனி புதிதாக மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்த புதிய அவசர சட்டம் ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய கொண்டுவர ப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியதும் சிறார்களுக்கு அவர்களின் அடையாளத்தை கண்டறிய பையோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கபடுகிறது. அதற்கு பதிலாக புதிய முறையை கொண்டுவர இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ சான்றுகளில் (ஓவிடி) ஆதார் எண்ணையும் சேர்த்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மானியம் உள்பட பயன்களை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் பயனைப் பெற வாடிக்கையாளர் விரும்பினால், அவரின் ஆதார் எண் போன்ற விவரங்களை வங்கிகள் பெற்று வாடிக்கையாளரின் ஆவண சான்றுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் வாடிக்கையாளரின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


Tags : Reserve Bank of India ,customer , Reserve Bank of India , Aadhaar information ,customer
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...