×

நாடாளுமன்ற தேர்தலுக்காக மாற்றப்பட்ட 28 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் மாற்றப்பட்ட 28 கூடுதல் எஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, காவல்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தமிழகம் முழுவதும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 28 கூடுதல் எஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழக டிஜிபி டி.ேக.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு: சென்னை காவல் துறையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கூடுதல் துணை கமிஷனராக இருந்த ஆரோக்கியம் சென்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும், சென்னை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராக இருந்த சுப்பாராஜ் திருப்பூர் நகர குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த மாணிக்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும்,
திருவள்ளூர் மது விலக்கு அமலாக்கப்பிரிவில் கூடுதல் எஸ்பியாக இருந்ததில்லை நடராஜன் அதே மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும், கடலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவில் இருந்த கூடுதல் எஸ்பி அசோக்குமார் அதே மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும், வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவில்  கூடுதல் எஸ்பியாக இருந்த பாலசுப்பிரமணியன் அதே மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும்,

திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த பரந்தாமன் அதே மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும், சேலம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த சுரேஷ்குமார் அதே மாவட்டம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும்,  கிருஷ்ணகிரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த லோகநாதன் அதே மாவட்டம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு மற்றும் கூடுதல் பொறுப்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு என தமிழகம் முழுவதும் 28 கூடுதல் எஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : elections ,DG Rajendran ,DGP , 28 additional SP , parliamentary elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...