×

புதுச்சேரியின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊசுட்டேரி வறண்டது: தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரியின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊசுட்டேரியை சரிவர தூர் வாராததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பருவமழை பொய்த்தது மற்றும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் வறட்சியின் பிடியில் புதுசேரியின் மிகப்பெரிய ஏரி சிக்கியுள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கிராமங்களை சுற்றி அமைந்துள்ள இந்த ஏரியின் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் வறண்டு பாலைவானம் போல் மாறிவிட்டது. மேலும் ஏரியில் இருந்த உயிரினங்கள் மற்றும் பறவைகள் இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் காலத்தை எவ்வாறு சமாளிப்பது என்று அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். போர்க்கால அடிப்படையில் ஊசுட்டேரியை தூர்வாரி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறியதாவது, ஊசுட்டேரியை சுற்றி ஏறத்தாய 30 கிராமங்கள் உள்ளதாகவும் அவைகளில் கிட்டத்தட்ட சுமார் 20 கிராமங்கள் புதுசேரியை சேர்ந்ததாகவும், 10 கிராமங்கள் தமிழகப்பகுதியை சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊசுட்டேரி வறண்டு வருவதால் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் ஆதலால் ஏரியை தூர்வார அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Puducherry , Puducherry, Ucutteri, drought, water, people, suffering
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...