×

இறக்குமதியை குறைக்கும் வகையில் சிங்கப்பூரில் பல்வேறு புதிய வழிமுறைகளுடன் விவசாய புரட்சி

சிங்கப்பூர்: இறக்குமதியை குறைக்கும் வகையில் சிங்கப்பூரில் பல்வேறு புதிய வழிமுறைகளுடன் விவசாய புரட்சி நடைபெற்று வருகின்றது. ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் 1 சதவீதம் நிலம் மட்டுமே விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்நாட்டில் விவசாயம் செய்யப்படுவதற்கான போதிய நிலம் இல்லாத நிலையில் குறைவான நிலத்தில் அதிகப்படியான விளைச்சலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய வழிமுறைகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மாடிகளில் காய்கறிகளை விளைவிப்பது, விவசாயத்திற்காகவே கட்டப்பட்ட வானுயர் கட்டிடங்கள், மணலில்லா விவசாயம், ஆய்வகத்தில் இறால்களை வளர்ப்பது என பல்வேறு புது முயற்சிகளில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதேபோல 8 மாடிகள் கொண்ட மீன் பண்ணையும் அந்நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணையின் மூலம் மீன்கள் உற்பத்தி 20 மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அந்நாட்டின் உணவு தேவையில் 10 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் 2030ம் ஆண்டுக்குள் இதனை 30 சதவீதமாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர்


Tags : Singapore , Singapore, import, decline, new way, agriculture, revolution
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...