×

குட்கா முறைகேடு வழக்கு: நாளை ஓய்வுபெறவுள்ள நிலையில் ரயில்வே டி.எஸ்.பி. மன்னர்மன்னன் பணியிடை நீக்கம்...ஐஜி சைலேந்திரபாபு நடவடிக்கை

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு கடந்த 2013-ம் ஆண்டு  முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சென்னையில் குட்கா விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்  மட்டுமல்லாது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்டோரும் அவரது உதவியாளரும் என அனைவருடன் விசாரணையாது தீவிரமாக நடைபெற்றது. இது தொடர்பாக இடைக்கால குற்றப்பத்திருக்கையும் சிபிஐ தாக்கல்  செய்திருந்தது. டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி போலீஸ் அதிகாரிகள் மன்னர் மன்னன், சம்பத் ஆகிய இருவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். மன்னர்மன்னன் புழல் உதவி கமி‌ஷனராக இருந்தவர். தற்போது மன்னர்மன்னன் மதுரையில் ரெயில்வே துணை போலீஸ்  சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். குட்கா ஊழலில் இவர் பெயர் கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த வருடம் இவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி இருந்தனர். அதன் அடிப்படையில்  மன்னர்மன்னனுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியது. மன்னர்மன்னன், சம்பத் இருவரிடமும் விசாரணை நடந்த பிறகு உயர் போலீஸ் அதிகாரிகளை நோக்கி சி.பி.ஐ.யின் பார்வை திரும்பும் என்றும் கூறப்பட்டது.

குட்கா முறைகேடு வழக்கில், நாளை பணி ஓய்வுபெறவுள்ள ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். டி.எஸ்.பி. மன்னர்மன்னனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே ஐஜி சைலேந்திரபாபு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளார். ஐஜி சைலேந்திரபாபுவின் இந்த நடவடிக்கையை பார்த்து குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


Tags : Gudka ,retirement ,Mannargaran ,IG Cylindrabhu , Gudka fraud case, railway DSP Mannarman, dismissal, IG Cylindababu
× RELATED புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5...