×

ராமேஸ்வரம், தாம்பரம், சென்னை சென்ட்ரல் ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 22621 / 22622 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஒரு ஏசி 3 டயர் பெட்டி, 4 தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் இணைப்பு ஜூன் 1ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயிலிலும், ஜூன் 2ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயிலிலும் இடம்பெறும்.

ரயில் எண் 22657 / 22658 தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஏசி 3 டயர் பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. இது ஜூன் 3ம் தேதி ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
போதும், 4ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்படும்போதும் இடம்பெறும்.

ரயில் எண் 12689 / 12690 சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டி ஜூன் 7ம் தேதி சென்ைன சென்ட்ரலில் இருந்து புறப்படுகின்ற ரயிலிலும், 9ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்படுகின்ற ரயிலிலும் இடம்பெறும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AC Boxes ,Tambaram ,Rameswaram ,Chennai Central Railway , Rameswaram, Tambaram, Chennai Central, Train
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!