ஐசிசி உலகக்கோப்பை 2019: இன்று இங்கிலாந்து - தென்னாபிரிக்கா அணிகள் மோதலை முன்னிட்டு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்

வாஷிங்டன்: ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது கூகுள் பக்கத்தில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூலை 14ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா, இருமுறை பட்டம் வென்ற இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெறுள்ளன. இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும், ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஜூன் 5ம் தேதி உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கவுள்ளது. இந்திய அணியின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்க்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி ஜூன் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்காக, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பல பரீட்சையில் ஈடுபட உள்ளனர். இதற்கு முன்னர், 6 உலக கோப்பை போட்டியில் சந்தித்துள்ள இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை கண்டுள்ளன. பலமிக்க இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் மோதவிருக்கின்றன. இதனை முன்னிட்டு வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் கூகுள் நிறுவனம் தனது பக்கத்தில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Related Stories: