×

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக குற்றச்சாட்டு..: தமிழக காங்கிரஸ் கட்சியினர் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி நீடிக்க வலியுறுத்தி சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியயதாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிககள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மக்களவை தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, எதிர்பாராத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் தமது முடிவை ராகுல் காந்தி மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை அண்ணா சாலையில் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இரு தொண்டர்களை சக தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி நடத்தியதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு காரணமாகும்.   


Tags : rally , TamilNadu Congress, Rally, Case, Rahul Gandhi
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி