×

ஜூன் 7-ல் மாலத்தீவு செல்கிறார் நரேந்திர மோடி: நாடாளுமன்றத்தில் உரையாற்ற தீர்மானம் நிறைவேற்றம்

மாலத்தீவு: மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. நடத்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி  அமைக்கிறது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில்,2வது முறையாக பிரதமர் பதவியை மோடி ஏற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி  பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு சுற்று பயணங்கள் பற்றிய அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. அதன்படி, 2-வது முறை பதவியேற்ற பின் முதன் முறையாக ஜூன் 7 மற்றும் 8 ம் தேதிகளில் மாலத்தீவு செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாலத்தீவு வரும் பிரதமர் மோடி தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  மாலத்தீவு வரும் பிரதமர் மோடி, அவையில் உரையாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மாலத்தீவு சட்டப்படி, வெளிநாட்டு தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்றால், எம்.பி.,க்கள் அனுமதி பெற வேண்டும். இதன்படி, நேற்று( மே 29) மோடி உரையாற்றுவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு  மனதாக நிறைவேற்றப்பட்டது. புவியியல் ரீதியில் இந்தியாவுக்கு முக்கியமான அண்டை நாடு மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாட்டிற்கு பிரதமர் மோடி முதலில் செல்வதை நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். கடந்த 2014-ல் பிரதமராக  பதவியேற்ற உடன் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வெளிநாட்டு பயண விவரம்;

ஜுன் 28, 29-ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்ஸ்க்கு செல்கிறார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யா செல்கிறார்.

செப்டம்பர் 3-வது வாரத்தில் நியூயார்க் செல்கிறார்.

நவம்பர் 4-ம் தேதி பாங்காங்க் செல்கிறார்.

நவம்பர் 11-ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார்.

Tags : Narendra Modi ,Maldives ,Parliament , Maldives, Narendra Modi, parliament, resolution
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...