×

திருச்சி என்.ஐ.டியில் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் தொடக்கம்

திருச்சி: தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சி என்.ஐ.டியில் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கணிப்பொறியில் நாம் தகவல்களை சேமிக்க பயன்படுத்தும் போல்டர் மாடலைப் போன்று,ஆராய்ச்சி கட்டுரைகள் அது தொடர்பான பதிவுகளை ஒரே இடத்தில், ஒரே குடையின் கீழ் சேமித்து வைப்பது அடைவு என அழைக்கப்படுகின்றது. இந்த வகையில் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை தயாரிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் செயல்படும்.

இஸ்ரோ மற்றும் திருச்சி என்.ஐ.டி ஆகியவை இணைந்து நிர்மானிக்கும் இந்த விண்வெளி  தொழில்நுட்ப அடைவு மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிகழ்வில்,வீடியோ கான்பரன்சிங் மூலம் இஸ்ரோ தலைவர் சிவன் பங்கேற்க திருச்சி  என்.ஐ.டி  இயக்குனர் மினி ஷாஜிதாமஸ், இஸ்ரோ திறன் மேம்பாட்டு திட்ட இயக்குனர் வெங்கடகிருஷ்ணர் ஆகியோர் கையேயுத்திட்டனர்.  என்.ஐ.டி அகர்தலா,ஜலந்தருக்கு அடுத்தப்படியாக திருச்சியில் விண்வெளி தொழில்நுப்ட அடைவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Trichy NIT , Trichy, NIT, Space Technology, Directory Center, Start
× RELATED மதுரையில் மேம்பாலம் இடிந்து...