×

இணையதளத்தில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தை ஹிட்டாக்கிய தமிழர்: தேசிய அளவில் ட்ரெண்டாகும் '#Pray_For_Neasamani'

சென்னை: சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் உருவாக்கும் மீம்கள் தான் இப்பொது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக இணையதளத்தில் மீம்கள் வைரலாக, நகைச்சுவை நடிகர் வடிவேலு மிக முக்கிய காரணம் என்றே சொல்லலாம். ஏனெனில் அவரை வைத்துதான் மீம்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. அந்த வகையில், காண்ட்ராக்டர் நேசமணி என்னும் கதாபாத்திரைத்தை வைத்து வெளிவரும் மீம்கள் தான் தமிழகத்தில் உச்சகட்ட ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதன் காரணமாக #Pray_For_Neasamani தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

#Pray_For_Neasamani ஹிட் ஆக காரணம்:

மீம்கள் ட்ரெண்டாவது ஒருபக்கம் இருந்தாலும், அந்த மீம்களுக்கு போடப்படும் கமெண்ட்களும் அதிக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நேற்று  `Civil Engineering Learners என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர் எனக் கேட்கப்பட்டது, அதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் அவர், #Pray_For_Neasamani எனப் பிரபல ஃபிரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமெண்ட் அடித்துள்ளார். அதன்பின் தான் கதையே ஆரம்பித்தது. அவர் அடித்த கமெண்டுகளை மையமாக கொண்டு இணையதளத்தில் தற்போது பல மீம்கள் வைரலாகி வருகிறது.

நேசமணியின் இந்த நிலைக்கு காரணமான விக்னேஷ் பிரபாகர் ஒரு சிவில் இன்ஜினீயர். இவர் தூத்துக்குடி மாவட்டம் புதூர் எனும் பகுதியை சேர்ந்தவர். நேசமணி கமெண்ட் ட்ரெண்ட் ஆன கதை குறித்து அவர் கூறியதாவது,  ``உங்க எல்லோருக்கும் வைரல் ஆன இந்த கமெண்ட்தான் தெரியும். ஆனால், உண்மையில் நான் இந்த கமென்ட் போடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இதே விஷயத்தை, இதே போல ஒரு போஸ்ட்டுக்கு தமிழில் கமெண்ட் செய்திருந்தேன்.ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு, தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ள இந்த வைரல் போஸ்டில் அவரது நண்பன் ஒருவர் விக்னேஷ் பெயரை டேக் செய்துள்ளார். அதற்கு ஆங்கிலத்தில் நேசமணி கேரக்டரை வைத்து காமெடியாக விக்னேஷ் ஒரு கமெண்ட் செய்துள்ளார். அதற்கு நேசமணி பத்தி நலம் விசாரிப்பவரும் விக்னேஷின் நண்பர்தான். எனது நண்பர் நகைச்சுவையாக கேட்க விக்னேஷும் கமெண்ட் செய்துள்ளார். ஆனால் அது இப்படி ட்ரெண்டாகும் என தெரியாது என விக்னேஷ் கூறினார். மேலும் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகும் என எதிர்பார்க்கவே இல்லை என கூறினார்.

இதையடுத்து, தற்போது இணைதளத்தில் நேசமணி கதாபாத்திரைத்தை வைத்து வெளிவரும் மீம்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழக முதலமைச்சரிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரை அனைவரும் நேசமணியின் நலம் குறித்து விசாரிப்பது போன்ற மீம்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.


Tags : Tamils ,character ,Neshamani ,Vadivelu , Nesmani, '# Pray_For_Neasamani', social website
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு