காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் நேற்று பேரணி நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸ் வழக்குபதிவு செய்தது. ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் நேற்று கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

× RELATED தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத தமிழக அரசு : கே.எஸ்.அழகிரி