×

ராமநாதபுரத்தில் தோல்விக்கு யார் காரணம்? பா.ஜ. நிர்வாகிகள் இடையே மோதல் முன்னாள் ஒன்றிய தலைவருக்கு கடி

ராமநாதபுரம்: தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்ற தகராறில் ராமநாதபுரத்தில் பாஜ நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது முன்னாள் ஒன்றிய தலைவரை கடித்ததாக, ஒன்றிய தலைவர் மீது புகார்  கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்
பட்டது.மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட, ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் 1 லட்சத்து  27 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கு காரணம் கிராமங்களில் தேர்தல் பணிகள் ஒழுங்காக நடக்கவில்லை என பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் பிரபாகரன் முறையாக தேர்தல் வேலை செய்யவில்லை. அதனால் அங்குள்ள கிராமங்களில் பாஜவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகவில்லை என முன்னாள் ஒன்றிய தலைவர்  ராமச்சந்திரன் புகார் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தனது கையை பிரபாகரன் கடித்ததாக ராமச்சந்திரனும், ராமச்சந்திரன் தன்னை தாக்கியதில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக பிரபாகரனும் திருப்புல்லாணி போலீசில் புகார் அளித்தனர். இருவர் மீதும் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே ராமநாதபுரம் பாஜவில் உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வர தொடங்கி விட்டது. பாஜ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அந்த அதிர்ச்சியிலிருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் மீளவே பல நாட்கள் ஆகிவிட்டது.  அனைவரையும் சமாதானப்படுத்தி முறையாக வேலை செய்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்’’ என்றார்.



Tags : defeat ,Ramanathapuram ,confrontation ,BJP ,union leader ,executives , Ramanathapuram?, BJP, Conflict ,executives, former union leader
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...