×

பிரபல இந்தி பாடகர் என்று கூறி பேஸ்புக்கில் பழகி பெண்களிடம் மோசடி; வாலிபர் கைது

கோவை: பிரபல இந்தி பாடகர் என்று கூறி பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பெண்களுடன் பழகி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் மகேந்திர வர்மன்(30). பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் தன்னை பிரபல இந்தி பாடகர் அர்மான் மாலிக் என்று கூறி ஏராளமான பெண்களிடம்  பழகியுள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் நைசாக பேசி காதலிப்பதாக கூறி அந்தரங்கமான புகைப்படத்தை வாங்கியுள்ளார்.  

இதையடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரவ விடுவதாகவும், அவ்வாறு செய்யாமல் இருக்க பணம்  மற்றும் நகையை தருமாறும் மகேந்திரவர்மன் பெண்களை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து சில பெண்கள் மகேந்திர வர்மனிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகையை இழந்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்ட  கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை செல்போனில் மகேந்திர வர்மனிடம் பேசவைத்து கோவைக்கு வரவழைத்து போலீசார் கைது செய்தனர்.  அவர் 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : singer ,women , Claiming,famous ,Hindi singer,Facebook,Young man arrested
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது