×

நாணய கண்காணிப்பு பட்டியலில் ரூபாயை நீக்கியது அமெரிக்கா: சீனா, ஜப்பான் கரன்சிகள் நீக்கம் இல்லை

வாஷிங்டன்: நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாயை அமெரிக்கா நீக்கியுள்ளது. தனது நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் முக்கிய நாடுகள் சிலவற்றின் கரன்சிகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது.  இதன்படி, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, சிங்கப்பூர் மலேசியா மற்றும் வியட்நாம்  நாடுகளின் கரன்களை அமெரிக்க கருவூலத்துறை கண்காணித்து வந்தது. அந்நிய செலாவணி வாங்குவதில் அடிக்கடி ஈடுபட்டதை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவை இந்த கண்காணிப்பு பட்டியலில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா சேர்த்தது. இது இந்திய ரூபாய்க்கு பின்னடைவாக  கருதப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்த அதிகம் வாங்கியது கவலையை ஏற்படுத்தியது.

 இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய ரூபாய் நிலையை அமெரிக்க கருவூலத்துறை ஆய்வு செய்தபோது, சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாய் விரைவில் நீக்கப்படும்  என்று தகவல்கள் வெளியாகின.  இதற்கேற்ப, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்ததால், தன்னிடம் உள்ள அந்நிய செலாவணியை இந்தியா விற்பனை செய்தது. ரூபாய் குறித்த கவலை காரணமாக கண்காணிப்பு பட்டியலில் சேர்த்திருந்த அமெரிக்க  கருவூலத்துறை, மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக, கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாயை நீக்கியுள்ளது. இதுபோல் சுவிட்சர்லாந்து கரன்சியும் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா, ஜப்பான் கரன்சிகள் இந்த பட்டியலில் உள்ளன.

Tags : USA ,China ,Japan , Currency, United States, China , Japan
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...